விசைப் படகு மீனவர்கள் 45 நாள் மீன் பிடிக்க தடை
தூத்துக்குடி: விசைப் படகு மீனவர்கள் தமிழக கடற் பகுதிகளில் 45 நாள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அது அமலுக்கு வந்துள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி மமுதல் மே 30ம் தேதி வரை விசைப் படகுகளில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்தக் கால கட்டத்தில் மீன்கள் குஞ்சு பொறிக்கும் என்பதால் இந்தத் தடை விதிக்கப்படுகிறது. அந்தத் தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி இன்று முதல் மே மாதம் 30ம் தேதி வரை விசைப் படகுகளில் சென்று ஆழ் கடலில் மீன் பிடிக்கக் கூடாது. நாட்டுப் படகுகளில் சென்று மீன் பிடிக்கத் தடை இல்லை.
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம், தூத்துக்குடி, கடலூர், சென்னை காசிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த சுமார் 3000 விசைப்படகுகள், ராமேஸ்வரம், கீழக்கரை, ஏர்வாடி, மண்டபம் ஆகிய இயற்கை துறைமுகங்களில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் என மொத்தம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இன்று முதல் தடை காலம் தொடங்கியுள்ளதால், விசைப் படகுகள் அனைத்தும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்தக் காலகட்டத்தில் படகுகள், மீன் பிடி வலைகள் ஆகியவற்றை பழுது பார்க்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications