ரவுடியை அடித்தே கொன்ற பொதுமக்கள்
சென்னை: சென்னை அருகே ரவுடியை பொதுமக்களே திரண்டு அடித்துக் கொலை செய்தனர். அத்தனை பேரையும் கைது செய்யுங்கள் என்று போலீஸாரை அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி காவனூர் திருத்தவெளியைச் சேர்ந்தவர் சிவா (33). இவர் அப்பகுதியில் ரவுடித்தனம் செய்து வந்தார். கூடுவாஞ்சேரி, மணிமங்கலம் காவல் நிலையங்களில் இவர் மீது ஐந்து கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன
இவரை நீண்ட நாட்களாக போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் சிவாவின் ரவுடித்தனத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியுற்று வந்தனர். பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டுவது, அடிப்பது, தகராறு செய்வது என்று சிவா சுதந்திரமாக அட்டகாசம் செய்து வந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் சிவா குடிபோதையில், சாலையின் நடுவே நின்று கொண்டு வருவோர், போவோரிடம் ரகளை செய்து வந்தார்.
இதையடுத்து அங்கு வந்த சிவாவின் நண்பர் கமலக் கண்ணன், சிவாவை வீட்டுக்குப் போகுமாறு கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சிவா, கமலக்கண்ணனை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார். ரத்தம் சொட்டச் சொட்ட தனது உறவினர்களிடம் விரைந்த கமலக்கண்ணன் சிவா தன்னைக் குத்தி விட்டதாக கூறினார்.
இதையடுத்து ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்து சிவாவை அடிக்க முயன்றனர். ஆனால் அவர் பயப்படவில்லை. மாறாக பொதுமக்களையும் தாக்க முயன்றார். இதையடுத்து அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து சிவாவை கம்பு, தடி, கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். சிலரைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து எங்களையும் கைது செய்யுங்கள் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருகே கிராம மக்களுக்கு இடையூறு செய்து வந்த அண்ணன் தம்பியை பொதுமக்கள் சேர்ந்து விரட்டி விரட்டிக் கொலை செய்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே ரவுடி ஒருவரை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அடித்துக் கொன்றிருப்பது போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications