குஜராத் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 41 மாணவ-மாணவிகள் பலி
குஜராத் மாநிலம் பாக்பூர் என்ற ஊரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 60 பேர் அரசுப் பேருந்து மூலம், போடேலி என்ற இடத்திற்கு இன்று காலை பரீட்சை எழுதச் சென்று கொண்டிருந்தனர். இதில் மேலும் பல பயணிகளும் இருந்தனர்.
போடேலி அருகே நர்மதை ஆற்றுப் பாலத்தில் பேருந்து சென்றபோது திடீரென நிலை தடுமாறி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பஸ் ஆற்றுக்குள் பாய்ந்தது.
இதில் 32 மாணவிகள், 9 மாணவர்கள், பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் மேலும் ஒரு பெண் பயணி ஆகியோர் நீரில் மூழ்கி பலியாயினர்.
சில மாணவர்கள் நீந்து கரை சேர்ந்துவிட்டனர்.
மீட்புப் படையினர் வெகு நேரம் போராடி பஸ்ஸை கிரேன் மூலம் ஆற்றிலிருந்து மீட்டனர். அதிலிருந்த மாணவிகள், மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
மேலும் தீயணைப்புப் படையினரும் அப் பகுதியினரும் ஆற்றுக்குள்ளும் உடல்களைத் தேடி வருகின்றனர்.
பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பல உடல்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுவரை 43 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இருப்பினும் உயிரிழப்பு 50க்கும் மேல் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஆற்றுக்குள் கவிந்ததில் அந்த பஸ் முழுவதுமாக உருக்குலைந்துவிட்டது. பலியான குழந்தைகள் அனைவரும் 13 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்













Click it and Unblock the Notifications