இரு வேறு விபத்து-சகோதரர்கள் உள்பட 5 பேர் பலி
திருச்சி: தமிழகத்தில் இன்று நடந்த இருவேறு சாலை விபத்துக்களில் சகோதரர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாயினர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ராஜமுருகன் (26), அவரது சகோதரர் சக்திவேல் (22) மற்றும் அனந்தராஜ் (22), மணிராஜ். 4 பேரும் திருவையாறுக்கு இன்று காரில் புறப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியுடன் கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் ராஜமுருகனும், சக்திவேலும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
படுகாயமடைந்த அனந்தராஜையும், மணிராஜையும் அப்பகுதியினர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அனந்தராஜ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். மணிராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சியில் நடந்த மற்றொரு விபத்தில் 2 பேர் இறந்தனர். திருச்சி ரயில் நிலையம் அருகில் பைக்கும், தனியார் பஸ்சும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இறந்தவர்கள் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
விஜயா.. ரஜினியா.. ராகவா லாரன்ஸ் மெகா திட்டம்.. திருச்சியில் ஆட்டம் ஆரம்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications