இன்று மீனாட்சி பட்டாபிஷேகம்-21ம் தேதி ஆற்றில் இறங்குகிறார் அழகர

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாள் சித்திரைத் திருவிழா உச்சகட்டத்தை நெருங்கியுள்ளது.
முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி பட்டாபிஷேகம் இன்று மாலை 6.58 முதல் 7.22க்குள் நடக்கிறது. மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து டி.கண்ணன் செங்கோலைப் பெற்று 2ம் பிரகாரத்தை வலம் வந்து மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார்.
9ம் நாள் திருவிழாவான நாளை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம் நடைபெறும்.
10ம் நாளான 18ம் தேதி காலை 9.30 மணி முதல் 9.54க்குள் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் விரிவான முறையில் செய்யப்பட்டுள்ளன. தொலைக்காட்சிகளில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முதல் முறையாக மீனாட்சி அம்மன் கோவில் இணையதளத்திலும் இதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19ம் தேதி தேரோட்டம் நடைபெறும். பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். 20ம் தேதி தேவேந்திர பூஜை நடைபெறும்.
கள்ளழகர் மதுரை புறப்பாடு
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அருள்மிகு கள்ளழகர் அழகர் கோவிலிலிருந்து ஏப்ரல் 18ம் தேதி மதுரைக்குப் புறப்படுகிறார். வழியெங்கும் மண்டகப் படிகளில் அவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
20 ம் தேதி மாலை தல்லாகுளத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை மதுரைக்குள் வரவேற்று அழைத்துச் செல்வர்.
ஏப்ரல் 21ம் தேதி காலை 7.05 முதல் 7.20க்குள் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்குகிறார்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நெருங்குவதையொட்டி மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் சிறப்புற செய்யப்பட்டுள்ளன.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications