வாசுதேவநல்லூர் அருகே அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை
நெல்லை: நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக இன்று பிற்பகல் 3 பேர் அடுத்தடுத்து சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள பேச்சியம்பட்டி, கீழப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான சிவக்குமார், மனோகரன் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் மகேந்திரனை, சிவக்குமாரும், மனோகரனும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே மகேந்திரன் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
இந்தத் தகவல் அறிந்ததும் மகேந்திரனின் தந்தையும், தம்பியும் அரிவாள்களுடன் அங்கு விரைந்தனர். மகேந்திரனை வெட்டி விட்டுத் தப்பி ஓட முயன்ற சிவக்குமாரையும், மனோகரனையும் விரட்டிப் பிடித்த அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டித் தள்ளினர். இதில் அண்ணன், தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அடுத்தடுத்து நடந்த இந்த பயங்கர கொலைகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications