கூட்டுறவு வங்கியில் கள்ள நோட்டு-நகை கடன் வாங்கியவர் அதிர்ச்சி
குளச்சல்: குளச்சல் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நகை கடன் வழங்கியபோது அதில் கள்ள நோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி அதை உடனே பெற்றுக் கொண்டு வேறு நோட்டை கொடுத்தனுப்பியது.
குளச்சலில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் இயேசுதாசன் என்பவர் நகைகளை அடகு வைத்து ரூ.25,000 கடன் வாங்கினார்.
அந்த பணத்தை அதே பகுதியில் உள்ள ஒரு வங்கியில் டெபாசிட் செய்யச் சென்றார். பணத்தை வாங்கிய வங்கி ஊழியர் அதில் ஒரு 500 ரூபாய் நோட்டு கள்ளநோட்டாக இருப்பதை கண்டுபிடித்தார்.
உடனடியாக இயேசுதாசனிடம் வங்கி அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது கூட்டுறவு வங்கி கிளையில் நகை கடன் பெற்றது குறித்து அவர் தெரிவித்தார். இதையடுத்து அந்த நோட்டை அவரிடமே வங்கி அதிகாரிகள் கொடுத்து விட்டனர்.
இயேசுதாசன் கூட்டுறவு வங்கி கிளைக்கு சென்று கள்ள நோட்டை காண்பித்து விவரத்தை கூறினார். உடனடியாக அவருக்கு மாற்று நோட்டு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிப்பதாக வங்கி நிர்வாகம் கூறியது.
நாகர்கோவிலில் 2 வாரங்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கி பேராசிரியர் ஒருவருக்கு கொடுத்த பணத்தில் கள்ள நோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை எல்ஐசி அலுவலகத்தில் வாங்க மறுத்து கிழித்து அனுப்பினர்.
இதனால் நோட்டை திருப்பி வாங்க வங்கியும் மறுத்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடந்து வருகிறது. தற்போது மீண்டும் வங்கியில் கள்ள நோட்டுப் புழக்கம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications