சுருட்டு சாமி தற்கொலை ஏன்?-பரபரப்பு தகவல்கள்
சென்னையில் சில காலத்திற்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுருட்டு சாமியாரும், அவர் 3வதாக கல்யாணம் செய்து கொண்ட டாக்டர் திவ்யாவும் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுருட்டு சாமியாரும், திவ்யாவும், 2வது மனைவி மணிமேகலையின் சிட்லப்பாக்கம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதால், மணிமேகலையிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், மூத்த மனைவி சந்திராவின் மகன் கச்சியப்பனிடமும் விசாரணை நடந்துள்ளது.
இந் நிலையில் தனது கணவரின் தற்கொலை குறித்து மணிமேகலை கூறுகையில், பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு டாக்டர் திவ்யா 3 நாட்களுக்கு முன்னர் எங்கள் வீட்டிற்கு வந்தார். எல்லோருடனும் அவர் சந்தோஷமாக பேசினார். நானும் அவரிடம் எதுவும் பிரச்சினை செய்யவில்லை.
வரும் சித்திரை பவுர்ணமி அன்று (19ம் தேதி), எனது கணவர் பள்ளிக்கரணையில் கட்டியுள்ள மதுரை வீரன் கோவிலுக்கு திருவிழா நடக்க இருந்தது.
திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார். ஆனால், கடந்த வாரம் அவருடைய முதல் மனைவி சந்திரா இங்கு வந்தார். என்னுடைய கணவர் பழனிசாமியிடம் சண்டை போட்டார்.
இந்த ஆண்டு மதுரை வீரன் கோவில் திருவிழாவை நீ எப்படி நடத்துகிறாய்? என்று பார்த்துவிடுகிறேன். திருவிழாவை கண்டிப்பாக நடத்த விடமாட்டேன் என்று மிரட்டியதுடன், வீட்டில் இருந்த டி.வி., கம்ப்யூட்டர் ஆகியவற்றை தரையில் தூக்கி போட்டு உடைத்தார்.
இதனால் எனது கணவர் பெரும் வேதனையில் மூழ்கினார். பல வருடங்களாக நடத்தி வரும் விழாவை நடத்தாமல் செய்து விடுவாளோ என்று வேதனைப்பட்டார்.
மீண்டும் நேற்று இரவு சந்திரா போனில் அவரிடம் சண்டை போட்டார். இதனால் அவர் சோகத்துடன் காணப்பட்டார்.
சிறிது நேரத்தில், எனது கணவரை பார்க்க 3 பேர் வந்தனர். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர்களுடன் சேர்ந்து காபி குடித்தார். அவர்கள் போன பின் அறைக்குள் சென்றுவிட்டார். அங்கு தான் திவ்யாவிடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது இந்த நிலைக்கு காரணம் முதல் மனைவி சந்திரா தான் என்று கூறியுள்ளார் மணிமேகலை.
யார் அந்த 3 பேர்?:
3 பேர் வந்து தனது கணவரை சந்தித்ததாகவும், அதன் பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் மணிமேகலை கூறியுள்ளது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த மூன்று பேர் என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பழனிச்சாமிக்கு அவருக்குத் தெரியாமல் அவர்கள் விஷத்தைக் கலந்திருப்பார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பழனிச்சாமியும், திவ்யாவும் அருந்திய காபியில் சயனைடு போன்ற கொடிய விஷம் கலந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில்தான் அதுகுறித்த விவரம் தெரிய வரும்.
ஆபாச வீடியோ காரணமா?:
இதற்கிடயே, மணிமேகலையின் வீட்டில் பழனிச்சாமியும் திவ்யாவும் உல்லாசமாக இருந்ததை சிலர் வீடியோவில் படமாக்கி விட்டதாகவும், இதுகுறித்த தகவல் பழனிச்சாமிக்கு தெரியவந்ததால் அவர் பெரும் வேதனை அடைந்தார் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.
வீடியோ எடுத்த அந்த கும்பல் பழனிச்சாமியிடம் அதைக் கூறி பணம் பறிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் அவரும், திவ்யாவும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது













Click it and Unblock the Notifications