22ம் தேதி மிஸ் கூவாகம் போட்டி
விழுப்புரம்: புகழ் பெற்ற மிஸ் கூவாகம் போட்டி வருகிற 22ம் தேதி விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில்ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான அரவாணிகள் பங்கேற்று கூத்தாண்டவரை வழிபடுவர்.
கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக அரவாணிகளுக்கான அழகிப் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அழகிப் போட்டி வருகிற 22ம் தேதி நடைபெறவுள்ளது.
22ம் தேதி காலை மிஸ் கூவாகம் அழகிப் போட்டி விழுப்புரம் கேசிபி திருமண மண்டபத்தில் நடைபெறும்.
அன்று இரவு கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம் நடக்கிறது. மறு நாள் தேர்த் திருவிழா நடைபெறும்.
மிஸ் கூவாகம் அழகிப் போட்டி தவிர நாட்டியாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவையொட்டி விழுப்புரம் மற்றும் கூவாகத்தில் அரவாணிகள் குவிந்து வருகின்றனர். ஜோடி ஜோடியாக கடைகளுக்குச் சென்று டிரஸ்கள் வாங்குவது, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உள்ளிட்டவற்றில் அவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications