Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நேரத்தில் இரு பிரசவம் - குழந்தைகள் மாறியதால் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் இரு பெண்களுக்கு நடந்த பிரசவத்திற்குப் பிறகு, அவர்களின் குழந்தைகள் மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து டி.என்.ஏ சோதனை செய்து குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை ராயபுரத்தில் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு பரக்கத் பேகம் என்ற பெண்ணும், காமாட்சி என்ற ெபண்ணும் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் இருவருக்கும் குழந்தை பிறந்தது. பரக்கத் பேகத்திற்கு பெண் குழந்தை பிறந்ததாக அவரது கணவர் அன்சாரிடமும், காமாட்சிக்கு ஆண் குழந்ைத பிறந்ததாக அவரது கணவர் இளங்கோவிடமும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இரவில் வார்டு சோதனைக்கு வந்த டாக்டர்கள், பரக்கத்திற்கு அருகில் படுத்திருந்த குழந்தையைப் பார்த்து, இவருக்கு ஆண் குழந்தைதானே பிறந்தது, பெண் குழந்தை படுத்திருக்கிறதே என்று கேட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மாற்றிப் படுக்க வைக்க முயன்றனர். ஆனால் அதை இரு தரப்பு உறவினர்களும் தடுத்தனர். குழந்தையை மாற்ற முயல்கிறீர்களா என்று வாக்குவாதத்தில் இறங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் பரக்கத்திற்குத்தான் ஆண் குழந்தை பிறந்தது, காமாட்சிக்கு பெண் குழந்தைதான் பிறந்தது. சிறிய தவறால் இது மாறிப் போயுள்ளது என்று டாக்டர்கள் விளக்கினர். ஆனால் அதை ஏற்க இரு தரப்பினரும் மறுத்து விட்டனர்.

இதையடுத்து போலீஸார் வந்தனர். அவர்கள் இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர். காலையில் இதுகுறித்துப் பேசிக் கொள்ளலாம் என்று அனைவரையும் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.

நேற்று காலை மீண்டும் பிரச்சினை வெடித்தது. இரு தரப்பினரும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மாலதியை அணுகி பிரச்சினையை எழுப்பினர். அப்போது மாலதி, பரக்கத்திற்கு ஆண் குழந்தை பிறந்தது, காமாட்சிக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதுதான் உண்மை. எங்கோ நடந்த தவறால் குழந்தைகள் மாறிப் போய் விட்டன என்றார் அவர்.

ஆனால் அதை ஏற்காத இரு தரப்பினரும் சாலை மறியலில் குதித்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்திலும், முன்பு உள்ள சாலையிலும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸார் விரைந்து வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டம் நடத்தியவர்களை அமைதிப்படுத்தி, நல்ல முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று கூறி கலைந்து போகச் செய்தனர்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் நிர்வாகத்தின் கீழ் இந்த ராயபுரம் மருத்துவமனை வருகிறது. இந்த விவகாரம் குறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் மைதிலி பாஸ்கர் கூறுகையில், இது மருத்துவமனை தரப்பில் நடந்து விட்ட தவறுதான்.

குழந்தைகள் பிறந்ததும் என்ன குழந்தை பிறந்துள்ளது என்பதை மைக்ரோபோன் மூலம் கூறி அதைப் பதிவு செய்வது வழக்கம். அதுபோலவே இந்த இரு பிரசவங்களின்போதும் செய்யப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தையின் உடலில் ஒரு டேக் மாட்டி விடப்படும். அந்த டேக் மாறியதால்தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டு விட்டது.

மயக்க மருந்து பதிவேடு, கேஸ் பதிவேடு, மருத்துவர்களின் குறிப்புகள், அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவரின் பதிவேடு ஆகிய அனைத்துமே காமாட்சிக்கு 4.59 மணிக்கு பெண் குழந்தையும், பரக்கத் பேகத்திற்கு 5.18 மணிக்கு ஆண் குழந்தையும் பிறந்ததாக கூறுகிறது.

இரு குழந்தைகளுக்கும் ரத்தம் பி பாசிட்டிவ் வகையைச் சேர்ந்ததாகும். எனவே இரு குழந்தைகளுக்கும் டி.என்.ஏ. சோதனை நடத்தி, அதன் அறிக்கையை கோர்ட் ஒன்றில் கொடுத்து, கோர்ட் மூலம் இருவரது குழந்தைகளையும் ஒப்படைக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+