மன்னரை சந்தித்து விரைவில் வெளியேறுமாறு கூற பிரசந்தா முடிவு

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மன்னர் ஞானேந்திரா கெளரவமாக வெளியேறி விட வேண்டும் என விரும்புகிறோம். இதை நானே மன்னரை நேரில் சந்தித்து பேசுவேன்.
நிலைமையை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவராகவே விலகி விட வேண்டும்.
மன்னர்கள் விரட்டப்பட்டதும், தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதும் கடந்த கால வரலாற்றில் நாம் காணலாம். ஆனால் அப்படி ஒரு நிலை நேபாளத்தில் நடக்கக் கூடாது என்று விரும்புகிறோம்.
மக்கள் தீர்ப்பை மதித்து விலகி விட தற்போது மன்னருக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை அவர் பயன்படுத்திக் கொண்டு அரண்மனையிலிருந்து வெளியேறி விட வேண்டும்.
கடந்த காலத்தில் மன்னர் செய்த செயல்களுக்கு மக்களிடம் மன்னிப்பு கிடைக்காது. மக்கள் மன்னிக்கவும் மாட்டார்கள் என்றார் பிரசந்தா.
நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி அதிக இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கவுள்ளது. முழுமையான தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் 601 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் மாவோயிஸ்ட் கட்சியே பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் நிலை உள்ளது.
மாவோயிஸ்ட் வெற்றியின் மூலம் 240 ஆண்டு கால மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
நேபாள கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் கட்சியின் 2ம் நிலைத் தலைவரான பாபுராம் பட்டாராய், அடுத்த பிரதமராக பதவியேற்பார் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே மன்னர் ஞானேந்திரா, அரண்மனையை விட்டு வெளியேற நான்கு வார கால கெடு விதித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications