மருத்துவர்களுக்கு கட்டாய கிராமப்புற சேவை: கமிட்டி பரிந்துரை
டெல்லி: மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் ஒரு ஆண்டு கட்டாய கிராமப்புற சேவையாற்ற வேண்டும் என சாம்பசிவ ராவ் கமிட்டி மத்திய சுகாதாரத் துறைக்குப் பரிந்துரைத்துள்ளது.
மருத்துவ மாணவர்கள் ஒரு ஆண்டு கட்டாய கிராமப்புற சேவையாற்ற வேண்டும் என்ற முடிவை கடந்த ஆண்டு மத்திய சுகாதாரத் துறை எடுத்தது. இதற்கு நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களிடையே கடும் எதிர்ப்புகிளம்பியது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
தமிழகத்தில் இந்தப் போராட்டம் பெரிய அளவில் இருந்தது. இதையடுத்து சாம்பசிவ ராவ் தலைமையில் 6 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசு அறிவித்தது. இந்த கமிட்டியினர் நாடு முழுவதும் சென்று மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் கருத்தறிந்தது.
அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத் துறையிடம் இந்தக் கமிட்டி பரிந்துரையை தாக்கல் செய்துள்ளது.
அதன்படி, மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்களது படிப்புக் காலத்தோடு சேர்த்து ஒரு ஆண்டு கிராமப்புற சேவையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
அரசு, தனியார் மருத்துவக் கல்லூரி என பாரபட்சம் இல்லாமல் அனைத்து மாணவர்களும் இந்த கட்டாய கிராமப்புற சேவையை மேற்கொள்ள வேண்டும்.
கிராமப்புற சேவைக்காலத்தின்போது மாதம் ரூ. 10 ஆயிரத்திற்குக் குறையாமல் உதவித் தொகை அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"அந்த" விஷயத்திற்கு மாத்திரை சாப்பிட்ட இளைஞர்.. துடிதுடித்து மரணம்.. உடலை விட்டுவிட்டு ஓடிய காதலி -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம்












Click it and Unblock the Notifications