சிறையில் முருகன் உண்ணாவிரதம்?
Subscribe to Oneindia Tamil

ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா கடந்த 19ம் தேதி வேலூர் சிறைக்கு வந்து நளினியை சந்தித்தார்.
இதையடுத்து பெண்கள் சிறையில் உள்ள நளினியை முருகன் சந்தித்துள்ளார். அப்போது பிரியங்காவிடம் தான் பேசிய முழு விபரத்தையும் சொல்ல நளினி மறுப்பதாக முருகனுக்கு அதிருப்தி ஏற்பட்டது.
இதனால் அந்தச் சந்திப்பின்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து முருகன் பாதியில் வெளியே வந்துவிட்டார்.
பின்னர் சமாதானமாகி மீண்டும் நளினியை சந்திக்க முயன்றுள்ளார். ஆனால், முருகனை சந்திக்க நளினி சந்திக்க மறுத்து விட்டார்.
இதனால் விரக்தியடைந்த முருகன் நேற்று காலையிலிருந்து சாப்பிட மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications