ஆப்கானிஸ்தானில் 2 இந்தியத் தொழிலாளர்கள் கடத்தல்
காபூல்: ஆப்கானிஸ்தானில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய தொழிலாளர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் சாலை போடும் பணியில் இந்தியத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சமீப காலமாக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். கடந்த 12ம் தேதி தமிழர் கோவிந்தசாமி உள்ளிட்ட இரு இந்தியர்களை, மனித குண்டு மூலம் தலிபான் தீவிரவாதிகள் படுகொலை செய்தனர்.
இந்த நிலையில் 2 இந்தியத் தொழிலாளர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் சாலை போடும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய தொழிலாளர்கள் மற்றும் ஒரு டாக்சி டிரைவர் நேற்று மாலை கடத்திச் செல்லப்பட்டதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.
காபூலை நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இவர்கள் கடத்தப்பட்டதாக தெரிகிறது.
துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத நபர்களை கடத்திச் சென்றதாக ஆப்கானிஸ்தான் போலீசார் தெரிவிக்கின்றனர். கடத்தியது யார் என்று உடனடியாக தெரியவில்லை. ஆனால் தலிபான் தீவிரவாதிகள்தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications