கல்கி பகவான் கோவில் விழாவில் நெரிசல் - 2 பேர் பலி

திருப்பதி அருகே வரதாபாளையம் என்ற இடத்தில் கல்கி பகவான் தங்க கோவில் நகரம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 400 கோடியில் இந்த நகரம் உருவாகியுள்ளது. நேற்று அதன் திறப்பு விழாவுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. கல்கி பகவான் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டதால் பெரும் கூட்டம் கூடியது.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் அப்பகுதியே பெரும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. கூட்டம் கொஞ்சம் கூட குறையாமல் வந்து கொண்டே இருந்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
விழா நடந்த இடத்தில் நிற்கக் கூட முடியாத அளவுக்கு கூட்டம் அதிகம் இருந்தது. இந்த நிலையில் கோவிலின் 2 மற்றும் 3வது தளங்களில் அமைக்கப்பட்டிருந்த மேடைகளில் நிறைய பேர் கூடியதால் அது பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தது. இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பும், நெரிசலும் ஏற்பட்டது.
பக்தர்கள் பீதியடைந்து அங்கிருந்து வெளியேற முயன்றனர். அப்போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சீனிவாஸ், வெங்கடேஷ் ஆகிய ஆந்திர மாநில பக்தர்கள் நெரிசலில் சிக்கி மிதிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசலில் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து தங்கக் கோவில் நகர திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டு விட்டது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications