இலங்கையில் ராணுவம்-புலிகள் பயங்கர சண்டை-67 பேர் பலி
ஆனால், தங்கள் தரப்பில் 15 பேர் மட்டுமே பலியானதாகவும் புலிகள் தரப்பில் 52 பேர் பலியானதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு யாழ்பாணத்தின் கிளாகி, முகமலை பகுதிகளில் ராணுவத்தி்ன் 55, 53வது படைப் பிரிவுகளைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் திடீரென முன்னேறி தாக்குதல் நடத்தினர்.
மேற்கே கிளாலியில் ஆரம்பித்து முகமாலை வழியாக கிழக்கே கண்டல் வரை சுமார் 7 கிமீ தொலைவுக்கு இலங்கை ராணுவத்தினர் தாக்குதலை நடத்தினர்.
ராக்கெட் வீச்சு, பீரங்கி-ஆர்ட்டிலரி தாக்குதல்கள் நடத்தியபடி கவச வாகனங்களில் ராணுவத்தினர் முன்னேறினர்.
இதையடுத்து புலிகள் பயங்கர பதிலடி தாக்குதல் நடத்தினர். இதனால் ராணுவத்திணரால் மேலும் முன்னேற இயலவில்லை.
இன்று பகல் 1 மணி வரை கிட்டத்தட்ட 10 மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 38 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 84 ராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.
ஆனால், புலிகளில் 52 பேர் பலியாகிவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. தங்கள் தரப்பில் 15 பேர் மட்டுமே பலியானதாகவும் 74 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.
புலிகள் வசமிருந்த சில பகுதிகளை கைப்பற்றியுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், தாக்குதல் நடத்திய ராணுவத்தினரை தங்களது பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துவிட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், தனது தரப்பில் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை.
இந்த சண்டையைத் தொடர்ந்து அந்தப் பகுதி முழுவதும் உடலங்கள் சிதறிக் கிடக்கின்றன. இந்தத் தாக்குதலை நடத்தியபோது புலிகள் வைத்திருந்த கண்ணிவெடிகளில் சிக்கி பல வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பலியான வீரர்களின் உடல்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு













Click it and Unblock the Notifications