பந்த்க்கு அழைப்பு-போஸ்டர் ஒட்டிய பார்வர்டு பிளாக் கட்சியினர் கைது
ராஜபாளையம்: நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்து அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து நாளை (24ம் தேதி) தென் மாவட்டங்களில் பந்த் நடத்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் நடிகர் கார்த்திக் அறிவித்துள்ளார்.
இதையடுத்து தென் மாவட்டங்களில் பந்துக்கு அழைப்பு விடுத்தும் ஆதரவு தெரிவி்த்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
ராஜபாளையத்திலும் இதே போல போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால் அந்த போஸ்டர்களில் அச்சகத்தின் பெயரோ, முகவரியோ இல்லை. இது சட்டப்படி குற்றமாகும்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்டுவர்டு பிளாக் தொண்டர்களான சமுத்திரம், அழகர்சாமி, சக்திவேல், மகேந்திரன், சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.
நகரச்செயலாளர் கிராதி கோவிந்தராஜ் தலைமறைவாகிவட்டார்.
மேலும் பந்த்க்கு ஆதரவாக ஒட்டபட்ட போஸ்டர்களையும் போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications