கொடைக்கானலில் வாந்தி பேதி: 400 பேர் மருத்துவமனையில்
கொடைக்கானல்: கொடைக்கானல் அருகில் உள்ள கிராமஙக்ளைச் சேர்ந்த சுமார் 400 பேர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு, ஆலடிபட்டி, ஊரல்பட்டி, கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று முன் தினம் இந்த கிராமங்களில் வசிக்கும் 400க்கும் மேற்பட்டோருக்கு திடீரென்று வாந்தி பேதி ஏற்பட்டது.
கடுமையாக பாதிக்கப்பட்ட அனைவரும் பண்ணைக்காடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் தேனி, வத்தலகுண்டு, திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வாசுகி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து விசாரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications