சென்னையில் மாபெரும் மகளிர் சுய உதவிக் குழு விற்பனை வளாகம்
சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய மாநில அளவிலான மாபெரும் பொருட்காட்சி- விற்பனை வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அமைச்சர் ஸ்டாலின் கூறுகையில்,
தமிழக அரசு மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 1.5 லட்சம் பேருக்கு ரூ. 150 கோடி சுழல் நிதி வழங்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய 29 மாவட்டங்களில் தலா ரூ.28 லட்சம் செலவில் மகளிர் சுய உதவிக்குழு வணிக வளாகம் கட்டப்படும்.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே 34,300 சதுர அடி பரப்பளவில் ரூ.10.7 கோடி செலவில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய மாநில அளவிலான பொருட்காட்சி மற்றும் விற்பனை வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் இந்த கட்டிடம் கட்டப்படுகிறது என்றார் ஸ்டாலின்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications