குடும்பத்துடன் கடத்தல்- அதிமுக கவுன்சிலர் கைது
சென்னை: கடனை திருப்பித் தராததால் தொழிலதிபர் குடும்பத்துடன் கடத்தப்பட்டார். தகவலறிந்த போலீசார் அவர்களை அதிரடியாக மீட்டனர். இதுதொடர்பாக அதிமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
அம்பத்தூர் வி.ஜி.என். சாந்தி நகரைச்சேர்ந்தவர் தொழில் அதிபர் சந்திரசேகர் (45). இவரது மனைவி வெற்றிச்செல்வி. இவர்களது மகள் பிரீதா. மகன் பிரவீன். கிழக்கு தாம்பரம் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வசந்தி ( 62). ஓய்வு பெற்ற ஆசிரியை.
சந்திரசேகர் வசந்தியிடம் ரூ.15 லட்சம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் திருப்பி தராமல் தட்டிக்கழித்து வந்தார். பணத்தை வசூலித்துத் தரும்படி தாம்பரம் அதிமுக கவுன்சிலர் சாய்கணேஷிடம் முறையிட்டார் வசந்தி.
இதையடுத்து சாய்கணேஷ், அடியாட்களுடன் சென்று சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்திச் சென்று வசந்தியின் வீட்டில் சிறை வைத்தார். பணத்தை உடனே திருப்பி தரும்படி சந்திரசேகரைய அடித்து உதைத்துள்ளனர்.
இதையடுத்து, சந்திரசேகர் தனது அண்ணன் பழனிச்சாமியை போனில் தொடர்பு கொண்டு தான் குடும்பத்துடன் கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்படுவதாகவும், உடனே பணத்துடன் வசந்தி வீட்டுக்கு வருமாறு அழுது கொண்டே கூறினார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி உடனே வருவதாக கூறினார். பின்னர் தாம்பரம் உதவி கமிஷனர் தனராஜிடம் பழனிச்சாமி புகார் செய்தார். இதையடுத்து உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் வசந்தி வீட்டுக்கு சென்று சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினரை அதிரடியாக மீட்டனர்.
பின்னர் கவுன்சிலர் சாய் கணேஷை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications