பேனர் அகற்றம்-போலீசாருடன் திமுகவினர் மோதல்
கரூர்: போலி மதுபானம் விற்ற அதிமுகவினரை கண்டித்து திமுகவினர் வைத்த பேனரை போலீசார் அகற்றியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
கரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து திருச்சி டிஐஜி அசோக்குமார்தாஸ் தலைமையில் சமீபத்தில் ரெய்டு நடந்தது. தாந்தோனிமலையில் உள்ள ஒரு தோட்டத்தில் 576 போலி மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி செயலாளர் தானேஷ், நகர மாணவர் அணி அமைப்பாளர் கோல்ட் ஸ்பாட் ராஜா, தாந்தோணி நகர செயலாளர் ராயனூர் ரவி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் முத்துகுமார், ராமலிங்கம், சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் போலி மதுபானம் சப்ளை செய்த அதிமுக நிர்வாகிகளை கண்டித்தும், அதற்கு துணை போனதாக கூறி கரூர் அதிமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கண்டித்தும் கரூர் பஸ் நிலையம் அருகில் நேற்று நள்ளிரவில் திமுகவினர்டிஜிட்டல் பேனர் வைத்தனர்.
தகவலறிந்த போலீசார் அந்த பேனர்களை உடனே அப்புறப்படுத்தினர். இதையறிந்த திமுகவினர் உடனடியாக கரூர் நகர காவல் நிலையத்தைமுற்றுகையிட்டனர். இருதரப்புக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. பின்னர் முறையாக அனுமதி பெற்ற பின்பு திமுகவினர் பேனர்கள் வைக்க முடிவு செய்யப்பட்டது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications