கூரியர் சேவையை முறைப்படுத்த விரைவில் சட்டம்
சென்னை: கூரியர் சேவையை முறைப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய தகவல் தொடர்புத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஏ.ராசா கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான மின்னணு சர்வதேச மணி ஆர்டர் சேவையை இன்று சென்னையில் ராசா தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடு முழுவதும் உள்ள கூரியர் சேவையை முறைப்படுத்த விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். இதுதொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு பல்வேறு துறைகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது கூரியர் சேவையை முறைப்படுத்த தனியாக சட்டம் எதுவும் இல்லை. எனவே விரைவில் இது தொடர்பான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இதன் மூலம் பொதுமக்களும், தபால் துறையும் பெரும் பலன் அடைவார்கள்.
மேலும் தபால் துறைக்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்கும் வகையிலான பல்வேறு புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும்.
ஊரகப் பகுதிகளில் உள்ள தபால் நிலையங்கள் உள்ளூர் மக்களுக்குத் தேவையான பிற சேவைகளிலும் ஈடுபட வேண்டும். இதன் மூலம் லாபத்தை அதிகரிக்கலாம்.
வெறுமனே தபால்களை சுமக்கும் பணியை மட்டும் தபால்காரர்கள் செய்யக் கூடாது. பிற சேவைகளிலும் அவர்கள் ஈடுபட வேண்டும்.
இந்தியாவில் ரயில்வே துறைக்கு அடுத்து மிகப் பெரிய கட்டமைப்பு மற்றும் சொத்துக்களுடன் கூடிய துறையாக தபால் துறை விளங்குகிறது என்றார் அவர்.
-
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications