தமிழகத்திலிருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தல்: ஆந்திரா டிஐஜி
திருப்பதி: தமிழகத்தில் இருந்துதான் ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுகிறது என்று ஆந்திரா ஊழல் கண்காணிப்பு அமலாக்க டிஐஜி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அமோகமாக நடப்பதாக பல்வேறு கட்சிளும் குற்றம் சாட்டி வருகின்றன. இப்போது இதை ஆந்திர மாநில டிஐஜி பாலசுப்ரமணியம் உறுதி செய்துள்ளார். தமிழகத்திலிருந்துதான் ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அவர் போட்டு உடைத்துள்ளார்.
திருப்பதியில் பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னையில் இருந்து ஆந்திரா எல்லையில் உள்ள தடா பகுதி வழியாக நெல்லூர் மாவட்டத்துக்குள் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரப்படுகின்றன.
போலி பில்கள் மூலம் லாரிகளில் இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்படுகின்றன.
அங்கிருந்து கோலார் பகுதி வழியாக கர்நாடகா மாநிலத்துக்கு தமிழக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த அரிசி கடத்தலைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
சமீபத்தில் தமிழகத்தில் நெல்லூர் வழியாக கோலார் பகுதிக்குள் கடத்த முயன்ற 545 மூட்டை ரேஷன் அரிசியை சந்திரகிரி போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
-
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications