அத்வானியின் நாகர்கோவில் வருகை திடீர் ரத்து
நாகர்கோவில்: நாகர்கோவிலில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்துக்கு வருவதாக இருந்த பாஜக தலைவர் அத்வானியின் வருகை திடீரென்று ரத்தானது.
விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் கடந்த 5ம் தேதி பொள்ளாச்சியில் தாமரை யாத்திரை தொடங்கியது. தென்மண்டல அளவிலான இந்த யாத்திரை நேற்று நாகர்கோவிலில் முடிவடைந்தது. இதையொட்டி பொதுக் கூட்டத்திற்கும், யாத்திரை நிறைவு விழாவுக்கும் ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது. இதில் அத்வானி கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மாலை 6 மணிக்கு அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவார். 7 மணிக்கு பொதுக் கூட்டம் நடக்கும் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை 4.30 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டரில் வரும் அத்வானியை வரவேற்க பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசு, மாநில தலைவர் இல.கணேசன், மாநிலத் துணைத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் வேல்பாண்டியன் ஆகியோர் காத்திருந்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆனால் அப்போது கன மழை பெய்தது. இதனால் வானிலை மோசமாக இருந்ததால் அவரது வருகை தாமதமாகும் என்று எர்ணாகுளத்தில் முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து வானிலை மோசமாக இருந்தததால் பாதுகாப்பு அதிகாரிகள் ஹெலிகாப்டரை இயக்க அனுமதிக்கவில்லை. இதையடுத்து அத்வானியின் வருகை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மற்ற தலைவர்களை வைத்து பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications