ஒரே ராக்கெட்டில் 10 சாட்டிலைட்டுகள் - நாளை ஏவப்படுகிறது
சென்னை: பி.எஸ்.எல்.வி. - சி9 ராக்கெட் நாளை 10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி -சி9 ராக்கெட் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்து செயற்கைக் கோள்கள் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளன. இஸ்ரோவின் வரலாற்றில் ஒரே ராக்கெட் மூலம் பத்து செயற்கைக் கோள்கள் ஏவப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நாளை காலை 9.20 மணிக்கு சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. இது பி.எஸ்.எல்.வி வரிசையில் 13வது பயணமாகும்.
கார்ட்டோஸாட்-2ஏ, இந்திய சிறு செயற்கைகோள் (ஐஎம்எஸ்-1) மற்றும் 8 நானோ செயற்கைகோள்கள் என 10 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் ஏவப்படுகிறது.
8 நானோ செயற்கைகோள்களும் கனடா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடையதாகும். இவை ஒவ்வொன்றும் 3 முதல் 16 கிலோ எடை கொண்டது. 8 நானோ செயற்கைகோள்களின் மொத்த எடை 50 கிலோ.
இந்தியாவின் ரிமோட் சென்சிங் செயற்கைகோள்களான கார்ட்டோஸாட்-2ஏ 690 கிலோ எடை கொண்டது. இதில் அதிநவீன பேன் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.
இஸ்ரோ வடிவமைத்த (ஐஎம்எஸ்-1) இந்திய சிறு செயற்கைகோள் 83 கிலோ எடை கொண்டது.
நேற்று இரவு ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது. இதுவரை திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications