சரப்ஜித் தண்டனை ஆயுள் தண்டனையாக மாறும் வாய்ப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர் சரப்ஜித்தின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைய வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் அரசு ெதரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 1990ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சரப்ஜித்சிங் கைது செய்யப்பட்டார். அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 18 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருக்கும் சரப்ஜித் மே 1ம் தேதி தூக்கிலிடப்படுவார் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அவரைக் காப்பாற்ற இந்திய அரசுத் தரப்பிலும், பாகிஸ்தான் மனித உரிமை அமைப்புகள் சார்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சரப்ஜித் மீது கருணை காட்டும்படி பாகிஸ்தான் மனித உரிமைத்துறை முன்னாள் அமைச்சரும் மனித உரிமை ஆர்வலருமான அன்சாரி பர்னி அதிபர் முஷாரப்பிடம் கருணை மனு கொடுத்துள்ளார்.
மேலும் அவரது முயற்சியால் சரப்ஜித்தை அவரது குடும்பத்தினர் 23ம் தேதி பாகிஸ்தான் சென்று லாகூர் சிறையில் பார்த்தனர். சரப்ஜித்தின் சகோதரி தல்பீர் கவுர், மனைவி சுக்பிரீத் கவுர், மகள்கள் ஸ்வதீப் மற்றும் பூனம் ஆகியோர் லாகூர் கோட்லக்பத் சிறையில் இருந்த சரப்ஜித்தை சந்தித்தனர். தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளனர்.
மீண்டும் சரப்ஜித்தை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் அரசிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சரப்ஜித் சிங் உள்பட பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கைதிகளுக்கும் புதிய நம்பிக்கை ஏற்படும் வகையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் ஒரு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அதாவது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரது தண்டனையையும் ஆயுள் தண்டனையாக மாற்ற பாகிஸ்தான் அரசு அதிபரை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பான அறிக்கை ஒன்றை உள்துறை அமைச்சகம் தயாரித்துக் கொண்டிருக்கிறது. அது இறுதிக் கட்டத்தில் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இதுதொடர்பான இறுதி நிலவரம் தெரிய வரும் என்று பாகிஸ்தான் உள்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகம்மது சாதிக் கூறுகையில், சரப்ஜித்சிங்கை விடுவிக்க வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
உலகிலேயே மரண தண்டனை அதிகம் விதிக்கப்படும் நாடுகளில் பாகிஸ்தான் 2வது இடத்தில் உள்ளது. தற்போது பாகிஸ்தான் சிறைச்சாலைகளில் 7000க்கும் மேற்பட்டோர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கி காத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மொத்தம் 134 பேர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டனர். 2006ல் இது 83 ஆக இருந்தது. 2005ல் 52 பேரும், 2004ல் 21 பேரும், 2003ம் ஆண்டு 18 பேரும் தூக்கிலிடப்பட்டனர்.
ஆனால் பாகிஸ்தான் மக்கள் கட்சி தூக்குத் தண்டனையை அதிகம் விரும்பாத கட்சியாகும். பெனாசிர் ஆட்சிக்காலத்தின்போது மரண தண்டனை என்பது மிகவும் அரிதாக இருந்தது. 1988ம் ஆண்டு நிறைய மரண தண்டனைக் கைதிகளுக்கு பெனாசிர் பூட்டோ மன்னிப்பு அளித்தார் என்பது நினைவிருக்கலாம்.
அவரது தந்தையும், ஜியாவால் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டவருமான ஜூல்பிகர் அலி பூட்டோ 1970ம் ஆண்டு ஆயுள் தண்டனைக் காலத்தை 14 ஆண்டுகள் என்பதிலிருந்து 25 ஆண்டுகளாக உயர்த்தினார். அவரும் மரண தண்டனைக்கு எதிரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்தவரே பிரதமராக இருப்பதால் சரப்ஜித் சிங் உள்ளிட்ட தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு பெரும் நம்பிக்ைக ஏற்பட்டுள்ளது.
-
ஈரான் போரால் பாகிஸ்தானுக்கு பேரிடி.. இப்படி நடக்கும்னு எதிர்பார்த்து இருக்கவே மாட்டாங்கே.. போச்சே -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு












Click it and Unblock the Notifications