ரேஷனில் குறைந்த விலையில் சமையல் எண்ணெய்-மத்திய அரசு அறிமுகம்
டெல்லி: ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் சமையல் எண்ணெய் விற்பனை ஜூன் மாதம் தொடங்குகிறது.
உள்நாட்டில் உற்பத்தி குறைவாக இருப்பதால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சமையல் எண்ணெய் விலை 31 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சோயாபீன் எண்ணெய் 20.5 சதவீதமும், கடுகு எண்ணெய் 24 சதவீதமும் உயர்ந்தது. சூரியகாந்தி எண்ணெய் 30 சதவீதமும், பாமாயில் 17 சதவீதமும், வனஸ்பதி 15 சதவீதமும் உயர்ந்துள்ளது. விலை உயர்வை குறைக்க இறக்குமதி செய்யும் எண்ணெய்க்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. என்றாலும் விலை குறைவில்லை.
எனவே மத்திய அரசு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அந்தோதயா, அன்னயோஜனா திட்டத்தின் கீழ் தள்ளுபடி விலையில் சமையல் எண்ணெய் வழங்க முடிவு செய்துள்ளது.
இதற்காக ஒரு லிட்டர் எண்ணைக்கு ரூ.15 தள்ளுபடி செய்யப்படுகிறது. ஜூன் மாதல் முதல் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் சமையல் எண்ணெய் வழங்கப்பட உள்ளது.
இதற்கான உத்தரவு தயாராக உள்ளது. தொடக்கத்தில் 3 மாதங்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும். தள்ளுபடி விலையில் தொடர்ந்து வழங்குவது குறித்து விலையை பொறுத்து முடிவு செய்யப்படும் என்று மத்திய உணவு வினியோக அமைச்சர் அகிலேஷ் பிரசாத் சிங் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இதற்காக இந்த நிதி ஆண்டில் 10 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. மாதந்தோறும் ஒரு லட்சம் டன் சமையல் எண்ணை இறக்குமதி செய்ய பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுள்ளது. இறக்குமதி விலையின் அடிப்படையில் தள்ளுபடி தொகை குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications