அருண்குமாருக்கு வயலார் ரவி 'ரூபத்தில்' ஆப்பு!
சென்னை: காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு உலை வைக்கும் வகையில் செயல்பட்ட தமிழக காங்கிரஸ் பார்வையாளர் அருண் குமாருக்கு ஆப்பு வைக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் வயலார் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் அருண் குமாரின் பதவி டம்மியாக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்தவரான அருண்குமார் தமிழக காங்கிரஸ் பார்வையாளராக பொறுப்பேற்றவுடன் விஜய்காந்துடன் கூட்டணி பேச்சு நடத்தியதாகக் கூறி அதிர்ச்சி பரப்பினார்.
மேலும் இவருக்கும் காங்கிரசின் எந்த கோஷ்டிக்கும் ஒத்து வரவில்லை. இவர் கட்சி தலைமையகத்துக்கு வந்தால் சத்தியமூர்த்தி பவனின் வாட்ச்மேன்-டீ பாய் தவிர தவிர வேறு யாருமில்லாத நிலை ஏற்பட்டது.
இவ்வாறாக கேவலப்படுத்தப்பட்ட அருண்குமாருக்கு விஜய்காந்த் கூட்டணி குறித்து பேசியதற்காக டெல்லியிலும் டோஸ் கிடைத்தது. மேலும் ஆந்திர பிராமணர் என்று தி.க. தலைவர் வீரமணி மூலமாக மறைமுக தாக்குதல் நடத்தியது திமுக.
இதையடுத்து முதல்வர் கருணாநிதியை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டார். ஆனால், பல மாதங்களாகியும் அது கிடைக்கவில்லை.
இதனால் தமிழகம் வருவதையே குறைத்துக் கொண்டுவிட்ட அருண்குமார், டெல்லியில் தமி்ழ்ப் பத்திரிக்கையாளர்களை அவ்வப்போது சந்தித்து திமுவை 'சும்மாகாச்சுக்கும்' பாராட்டுவதை ஒரு வேலையாக வைத்துள்ளார்.
இந் நிலையில் இவருக்கு அடுத்த ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான வயலார் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பொறுப்பை ஏற்ற ரவி சென்னையில் வந்தார். நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்திட மாநில மற்றும் மாவட்டங்களில் தொண்டர்களை சந்தித்து ஆலோசனைகள் கேட்கப்படும். கர்நாடக தேர்தலுக்குப் பின் தமிழக காங்கிரசில் மாற்றங்கள் குறித்து முடிவு செய்யப்படும். இப்போதைக்கு எந்த மாற்றமும் இருக்காது.
கோவை மாவட்ட காங்கிரசில் ஏற்பட்டுள்ள அதிருப்தி குறித்து மாநில தலைவர் கிருஷ்ணசாமியுடன் பேச்சு நடத்துவேன்
தமிழகத்தில் காங்கிரசுக்கு புதிதாக கூட்டணி ஏற்பட வாய்ப்பு எதுவும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக உள்ளது. இந்த கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலிலும் களம் இறங்கும். கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் பெறுவோம் என்றார்.
-
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications