புலிகளுக்கு வெடிமருந்து கடத்தல்-திமுக பிரமுகர் கைது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்து கடத்த முயன்றதாக திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 24ம் தேதி ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து ஏரளாமான வெடி பொருட்கள் விடுதலைப் புலிகளுக்கு கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கியூ பிரிவு டி.ஐ.ஜி. சங்கர் ஜூவால் மற்றும் கடலோர காவல்படையினர் ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் கடலுக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது ஒரு கும்பல் கண்டெய்னரை கடலில் வீசி விட்டு தப்பிச்சென்றது. அவர்களை துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை.
கடலில் வீசப்பட்ட மிகப்பெரிய கண்டெய்னருக்குள் வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதைக் கைப்பற்ற முத்துக் குளிக்கும் மீனவர்கள் மற்றும் டைவர்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர்.
இந் நிலையில் இந்தக் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடியவர்கள் குறித்து கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ராமேஸ்வரம் தி.மு.க. நகர் குழு உறுப்பினர் வில்லாயுதம் சிக்கியுள்ளார்.
அவருடன் சேர்ந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்ட சேதுராஜா, முத்துச்செல்வம் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மண்டபம் அருகே அரியமான் கடல் பகுதியில் விடுதலைப் புலிகளுக்காக படகில் 280 லிட்டர் மண்ணெண்ணெயை கடத்திச் சென்ற உச்சிப்புளியை சேர்ந்த மனோகரன், தூத்துக்குடியை சேர்ந்த ராஜா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications