சந்தேக விதையும் சந்தேக செடியும்-ப.சிதம்பரம்
தேவகோட்டை: விவசாய கடன் தள்ளுபடியை எப்படி செயல்படுத்தப் போகிறீர்கள் என கேட்கிறார்கள். சந்தேக கண்ணோட்டத்தோடு, சந்தேகத்தை விதைத்தவர்கள், அந்த விதை முளைத்து செடியாக வளராதா, அதில் எதையாவது பறிக்கமுடியாதா என நினைக்கிறார்கள் என எதிர்க் கட்சியினரைத் தாக்கினார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் விஜயா வங்கியின் 1,052வது கிளையை ப.சிதம்பரம் திறந்து வைத்தார். வங்கியின் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான பிரகாஷ் பி.மல்லையா தலைமை வகித்தார்.
விழாவில் விஜயா வங்கியின் சார்பில் கல்விக் கடன் மற்றும் மகளிர் மேம்பாடு, சிறு வணிகம் போன்றவற்றுக்கான கடன்களை சிதம்பரம் வழங்கி பேசியதாவது:
கடந்த காலங்களில் வங்கிகள் செயலற்று கிடந்தன. ஐமு கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு ரூ.2.40 லட்சம் கோடி விவசாய கடனை வழங்கியுள்ளது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் முடிய 11,63,057 பேருக்கு ரூ.18,430 கோடி கல்வி கடன் கொடுத்துள்ளோம்.
நாட்டிலேயே மிக அதிகமான கல்வி கடனை கொடுத்து விஜயா வங்கி முன்னிலையில் உள்ளது. விஜயா வங்கி என்றாலே காபி தோட்டத்திற்கு கடன் வழங்கும் வங்கி என்று தான் பெயர் இருந்தது. தற்போது மற்ற கடன் வழங்குவதிலும் முன்னணியில் திகழ்கிறது.
மத்திய அரசு விவசாயக் கடன், கல்வி கடன் வழங்குவதில் பிடிவாதமும், உறுதியான திட சிந்தனையுடன் நடந்து கொள்வதால் கொள்கையில் வெற்றி அடைந்துள்ளோம். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் என்று எதிர்கட்சிகள் கோஷமிட்டனர்.
ரூ. 60,000 கோடி விவசாயகடன் தள்ளுபடி என அறிவித்தவுடன், எப்படி செயல்படுத்தப் போகிறீர்கள் என கேட்க தொடங்கிவிட்டனர். ஜூன் 30ம் தேதி முதல் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடியாகும் என்றார் சிதம்பரம்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications