'சியர்கேர்ள்'ஸுக்கு செலவிடும் பணத்தை விவசாயிகளுக்கு தரலாம்-தாக்கரே
இதுகுறித்து சாம்னா இதழில் அவர் கிரிக்கெட் டான்ஸ் பார் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில், நான் இசையை விரும்புகிறேன், நேசிக்கிறேன். அதேபோல கிரிக்கெட்டையும் நேசிக்கிறேன். ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் எதற்கு அரை குறை ஆடைகளுடன் பெண்கள் ஆட வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.
கிரிக்கெட் ஒரு விளையாட்டு. அது சூதாட்டம் அல்ல. அல்லது பார் டான்ஸும் அல்ல. முறையாக உடை அணிந்து நடனமாடும் பார் டான்ஸ் பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே ஊதியம் தரப்படுகிறது. ஆனால், கவர்ச்சிகரமான உடைகளுடன் ஆடும் சியர் கேர்ள்ஸ் பெண்களுக்கு ரூ.15 முதல் 20 லட்சம் வரை அள்ளித் தருகிறார்கள்.
உள்ளூரைச் சேர்ந்த நடிகை ராக்கி சாவந்த் கவர்ச்சிகரமாக ஆடியதற்காக அவருக்கு தடையெல்லாம் விதித்தார்கள். ஆனால் மகாராஷ்டிர துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீலோ, வெளிநாட்டு பெண்களை கவர்ச்சிகரமாக ஆட அனுமதிக்கிறார்.
காங்கிரஸ், தேசியவாதக காங்கிரஸ்கட்சியினருக்கு வெளிநாட்டுக்காரர்கள் மீதுதான் அதிக மோகம் உள்ளது. ஒரு வெளிநாட்டுக்காரரை பிரதமராக்க காங்கிரஸ்காரர்கள் தீவிரமாக முயல்கிறார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சியர்கேர்ள்ஸ் மூலம் தனது வெளிநாட்டுப் பற்றை வெளிப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டுப் பெண்களுக்குப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பதற்குப் பதில் அவற்றை உள்ளூர் பார் நடன அழகிகளுக்குக் கொடுக்கலாம். அல்லது வாழ வழியின்றி வாடி வதங்கிக் கொண்டிருக்கும் அப்பாவி ஏழை விவசாயிகளுக்குக் கொடுத்தால் அவர்களது குடும்பங்களாவது சந்தோஷமாக இருக்கும் என்று கூறியுள்ளார் பால்தாக்கரே.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி













Click it and Unblock the Notifications