கணவன் எரித்துக் கொலை-கள்ளக் காதலனுடன் மனைவி கைது
பொள்ளாச்சி: கள்ளக்காதலை கண்டித்த கணவனை எரித்து கொலை செய்த மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூலக்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கவேல் (34), மனோன்மணி (32) தம்பதி. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.
தென்னை ஓலை தொழிலாளிகளான இருவரும் ஜமீன்காளியாபுரத்தில் ஓலை பின்னும் வேலை செய்தனர். அங்கு அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் ஓய்வு அறை உள்ளது.
இந்நிலையில் தங்கவேல் மர்மமான முறையில் தீயில் கருகி இறந்து கிடந்தார். மனோன்மணியும் அவரோடு வேலை செய்யும் செந்தில் என்பவரும் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு சென்றனர்.
போலீசார் அவர்களை விசாரித்தபோது கணவர் தங்கவேல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்றபோது இருவரும் காயமடைந்தோம் என்று மனோன்மணி கூறினார். சந்தேகமடைந்த போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து பொள்ளாச்சி டி.எஸ்.பி. தங்கதுரை மற்றும் வடக்கிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் இருவரிடமும் நடத்திய விசாரணையில் தங்கவேல் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
செந்திலுக்கும் மனோன்மணிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதை தங்கவேல் கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மனோன்மணியும் செந்திலும் தொழிலாளர் ஓய்வு கூடத்தில் உல்லாசமாக இருந்தனர்.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த தங்கவேலு இருவரையும் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தங்கவேல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தனர். வலியால் அலறித்துடித்த தங்கவேல், மனோன்மணியையும் செந்திலையும் கட்டிப்பிடிக்க ஓடினார். இதில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த இருவரும் அருகில் இருந்த ஓலைகளை தங்கவேல் மீது போட்டு எரித்தனர். இதில் தங்கவேல் கருகி இறந்தார் என்பது தெரியவந்தது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தீக்காயம் அடைந்த மனோன்மணி கோவை அரசு மருத்துவமனையிலும், செந்தில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications