யுபிஎஸ்சி தேர்வுகள்-தமிழில் எழுத தடை போட 'சக்திகள்' முயற்சி
டெல்லி: யுபிஎஸ்சி தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத தடை விதிக்க சில 'டெல்லி சக்திகள்' முயன்று வருகின்றன. இதற்கு தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐஆர்எஸ் மற்றும் இந்திய ஆட்சிப் பணிகளுக்கான தேர்வுகளை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது.
இந்தத் தேர்வுகளை இந்தி, ஆங்கிலம் தவிர தமிழ் உள்ளிட்ட அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் எழுத இப்போது வழியுள்ளது.
ஆனால், திடீரென இப்போது இந்தத் தேர்வுகளை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்ற புதிய விதியைக் கொண்டு வர சில வட நாட்டு சக்திகள் முயன்று வருகின்றன.
மக்களவையில் பேசிய உள்துறை இணையமைச்சர் ஜெய்ஸ்வால், போஜ்புரி மற்றும் ராஜஸ்தானி மொழிகளை எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சிவில் சர்வீஸ் தேர்வுகளை பல்வேறு மாநில மொழிகளில் நடத்துவது பெரும் சிரமமாக உள்ளது. இதனால், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் தேர்வுகளை நடத்தலாமா என்று யு.பி.எஸ்.சி. பரிசீலித்து வருவதாக குண்டைப் போட்டார்.
இதற்கு தென் மாநில எம்பிக்களிடம் கடும் எதி்ர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் தமிழக காங்கிரஸ் எம்பி கார்வேந்தன் தலைமையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.
அதில், மத்திய உள்துறை இணையமைச்சர் ஜெய்ஸ்வாலின் பேச்சு காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் எழுத முடியாத சூழ்நிலை வரும். இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டும் தேர்வு எழுத முடியும் என்ற நிலை வருமானால், கிராமப் பகுதி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்.
எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளை சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இருந்து நீக்கம் செய்தால் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் போன்ற தென் மாநிலங்களின் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர். அவ்வாறு செய்தால் அது மிகப்பெரிய அநீதியாகும்.
எனவே, எட்டாவது அட்டவணை மொழிகளை சிவில் சர்வீஸ் தேர்வு திட்டத்திலிருந்து நீக்க நினைக்கும் அதிகாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications