தர்மபுரியில் மருத்துவ கல்லூரி-கவுன்சில் இன்று ஆய்வு
தர்மபுரி: தர்மபுரியில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய மருத்துவக் கல்லூரியையொட்டி, அங்குள்ள அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ கவுன்சில் குழு இன்று ஆய்வு நடத்தியது.
தர்மபுரியில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி அங்கு மருத்துவக் கல்லூரியை தமிழக அரசு அமைக்க முடிவு செய்துள்ளது.
இதையடுத்து தற்போதுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டன. வகுப்பறைக் கட்டடங்கள், நிர்வாக அலுவலகங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. குடியிருப்புகள் உள்ளிட்டவையும் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கோரி இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து இந்திய மருத்துவக் கவுன்சில் ஆய்வுக் குழு ஒன்றை தர்மபுரிக்கு அனுப்பியது.
அக்குழு இன்று தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தது. இக்குழுவில் கவுன்சிலின் முழு நேர அதிகாரி டாக்டர் அனுப்ராஜ், பெங்களூர் தடயவியல் துறை அதிகாரி தேவதாஸ், ஹைதராபாத் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஷீலா மதன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், புற நோயாளிகள் பிரிவு உள்ளிட்டவற்றை இக்குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது.
இக்குழு அளிக்கும் ஆய்வறிக்கையை பொறுத்து இந்திய மருத்துவக் கவுன்சில், தர்மபுரி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கும்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications