For Daily Alerts
Just In
தடுப்பூசி-காட்டுமன்னார்கோவிலில் குழந்தை பலி
காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட 4 மாத குழந்தை உயிரிழந்தது.
ஏற்கனவே தமிழகத்திலும் ஒரி்ஸ்ஸாவிலும் 6க்கும் மேற்பட்ட குழந்தைகள் தடுப்பூசியால் பலியாகியுள்ள நிலையில் இந்த சாவு நிகழ்ந்துள்ளது.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ராதாநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த காலமேகத்தின் 4 மாதக் குழந்தையான முகேஷுக்கு இரு நாட்களுக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டது.
இந் நிலையில் அக் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.