கார்டோசாட்-2ஏ, ஐஎம்எஸ் செயற்கைக் கோள்கள் படம் அனுப்பத் தொடங்கின
சென்னை: இந்தியா அனுப்பியுள்ள கார்டோசாட்-2ஏ மற்றும் ஐஎம்எஸ்1 ஆகிய இரு செயற்கைக் கோள்களும் சிறப்பாக செயல்படுவதாகவும், ஐஎம்எஸ்-1லிருந்து முதல் படம் வந்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 28ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி-சி9 மூலம் பத்து செயற்கைக் கோள்களை ஏவி இஸ்ரோ வரலாறு படைத்தது. அதில் கார்டோசாட்-2ஏ மற்றும் ஐஎம்எஸ்-1 ஆகிய இரு செயற்கைக் கோள்கள் இந்தியாவுக்குச் சொந்தமானவை. மற்றவை வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் ஆகும்.
இந்தியாவின் இரு செயற்கைக் கோள்களும் சிறப்பாக செயல்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இரு செயற்கைக் கோள்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
ஐஎம்எஸ்-1 செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ள மல்ட்டி ஸ்பெக்டரல் கேமரா நேற்று முடுக்கி வைக்கப்பட்டது. அலகாபாத் முதல் ராமேஸ்வரம் வரையிலான பகுதியை அது படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது. இந்தப் படம் மிகத் தெளிவாக உள்ளது.
இன்று ஐஎம்எஸ்-1ல் உள்ள ஹைபர் ஸ்பெக்டர் இமேஜிங் கேமராவும், கார்டோசாட்-2ஏவில் உள்ள பான்குரோமேட்டிக் கேமராவும் முடுக்கி விடப்பட்ன.
இந்தக் கேமராக்கள் மூலம் உத்தரகான்ட் முதல் கர்நாடகம் வரையிலான பகுதி படம் பிடிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படங்கள் அனைத்தும் ஹைதராபாத், ஷாத் நகரில் உள்ள தேசிய ரிமோட் சென்சிங் ஏஜென்சிக்கு வந்து சேர்ந்துள்ளன. அத்தனை படங்களும் மிகத் தெளிவாக, துல்லியமாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications