ஏரி- கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள், 2 பெண்கள் பலி
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை பகுதியில் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்களும், கிணற்றில் விழுந்து 2 பெண்களும் இறந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நவ்ரோஜி தெருவைச் சேர்ந்த நாகராஜின் மகன் தன்ராஜ் (7). இவர்களது உறவினர் மகன் ஹரீஷ் (6). இருவரும் அருகில் உள்ள பட்டாளம்மன் ஏரியில் குளிக்கச் சென்றனர்.
இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தனர்.
கிணற்றில் மூழ்கி பெண்கள் பலி:
அதே போல தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தர்மவதிம்மனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதவரெட்டி மனைவி சசிகலா (32). அதே பகுதியைச் சேர்ந்த நாகப்பா என்பவரது மனைவி சுஜாதா (35). இருவரும் விவசாய கிணற்றில் துணி துவைக்கச் சென்றனர். துணி அலசும்போது சசிகலா தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.
அவரை காப்பாற்ற முயன்ற சுஜாதாவும் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இரண்டு சம்பவங்கள் குறித்தும் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications