பள்ளிவாசலில் பெண் பிணத்தை புதைக்க எதிர்ப்பு!
மதுரை: மதுரை, மேலூரில் உள்ள பள்ளிவாசலில் பெண் பிணத்தை புதைக்க தமுமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலூர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரீபாபேகம். இவருக்கும் மசக்கா உல்லா என்பவருக்கும் இடையே கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் தாய் வீட்டில் ஹரீபா பேகம் வசித்த போது அவருக்கும் எதிர்வீட்டில் வசிக்கும் செந்தில் குமார் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய ஹரீபா பேகம், செந்தில்குமாருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் செந்தில் குமார் ஹரீபா பேகத்தை விட்டு விட்டுப் போய் விட்டார். இதையடுத்து கைவிடப்பட்ட ஹரீபா பேகம் தனது தாய் வீட்டிற்குத் திரும்பினார்.
இந்த நிலையில் உடல் நலம் குன்றிய ஹரீபா பேகம் மரணமடைந்தார். அரவது உடலை அடக்கம் செய்ய மேலூர் பள்ளி வாசலுக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.
அப்போது ஹரீபா பேகத்தின் உடலை அடக்கம் செய்ய தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அடக்கம் செய்ய கூடாது என்று அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து டி.எஸ்.பி. மாறன் தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர். ஹரீபா பேகத்தின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க போலீஸார் அறிவுறுத்தினர். மேலும் பிண அடக்கத்தைத் தடுத்த தமுமுகவினர் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications