சேவை வரி- ஜவுளி உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்
கரூர்: சேவை வரி உள்பட பல மறைமுக வரிகளை நீக்க கோரியும், நூல் விலையை கட்டுப்படுத்த கோரியும் வரும் 16ம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் அவசர கூட்டம் தலைவர் குமார் தலைமையில் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாதல் ஜவுளி வர்த்தகம் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. பல அரசியல் கராணங்களால் நூல் விலை வரலாறு காணாத அளவில் ஏறியுள்ளது.
இதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையாக பாதித்துள்ளன. மறைமுக வரி என சேவை வரியை ஏற்றுமதியாளர்கள் 14 இடங்களில் செலுத்த வேண்டியுள்ளது. வெளிநாட்டு தரகர்களுக்கு சேவை வரி இல்லை என்று அரசு கூறி வந்தாலும் 12.36 சதவீதம் வரை சேவை வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் தொழிலை லாபகரமாக நடத்த முடியவில்லை.
இந்த கோரிக்கைகளை வலியுத்தி கரூரில் வரும் 7ம் தேதி முதல் அனைத்து ஜவுளி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள நிறுவனங்கள் சார்பில் கடையடைப்பு பேராட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாடு ஜவுளி கூட்டமைப்பு சார்பில் வரும் 16ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள ஜவுளி நிறுவனங்கள், அதனை சார்ந்த நிறுவனங்கள், மற்றும் நெசவாளர்கள் ஆகியோர் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கரூர் மாவட்ட நெசவாலைகள் அதிபர்கள் சங்கம் இன்று முதல் 3 நாள் ஸ்ட்ரைக் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications