காவிரி டெல்டா வளர்ச்சிக்கு உலக வங்கி ரூ.76.23 கோடி
புதுக்கோட்டை: புதுகை, தஞ்சை டெல்டா பகுதிகளில் ரூ.76.23 கோடி உலக வங்கி நிதியுதவியுடன் நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்வள மேலாண்மை திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் காவிரி ஆற்றுப் படுகையில் வேளாண் வளர்ச்சிக்காக உலக வங்கி நிதியுதவியளித்துள்ளது. இதன்படி ரூ.76.23 கோடி செலவில் நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்வள மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
புதுக்கோட்டையில் அக்னியாறு படுகையில் 8,476 ஹெக்டேர் நிலத்துக்கு ரூ.51.48 கோடி ரூபாயும் தஞ்சாவூரில் அம்புலியாறு படுகையில் 3,540 ஹெக்டேர் நிலத்துக்கு ரூ.24.75 கோடி ரூபாயும் இந்த திட்டத்துக்காக செலவிடப்படுகிறது.
வேளாண் விளைபொருள் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழக வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கால்வாய் சீரமைப்பு, புதிய தடுப்பணைகள் அமைத்து நீர்ஆதாரத்தை பெருக்குவதோடு விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை உடனடியாக கொள்முதல் செய்வதற்கு பல்வேறு தொழில்நிறுவனங்களுடன் தொடர்பும் ஏற்படுத்தித் தரப்படும்.
விவசாயம், பொதுப்பணி, நீர்வளம், வேளாண் பொறியியல், தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் வர்த்தகம் ஆகிய துறைகள் மற்றும் தமிழக வேளாண் பல்கலைக்கழத்துடன் ஒருங்கிணைந்து இந்த திட்டம் நிறைவேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications