அட்சய திரிதியை: காலடியில் கனகதாரா யாகம் தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

காலடி: அட்சய திரிதியை முன்னிட்டு ஆதிசங்கரர் அவதரித்த இடமான காலடியில் கனகதாரா யாகம் தொடங்கியது.

ஆதிசங்கரர் வாலிபராக இருந்தபோது யாசகத்துக்காக ஒரு மூதாட்டியின் வீட்டுக்குச் சென்றார். வறுமையான நிலையில் இருந்தபோதும்கூட அந்த மூதாட்டி, ஆதிசங்கரருக்கு ஒரு நெல்லிக்கனியைக் கொடுத்தாராம்.

இதனால் நெகிழ்ந்துபோன ஆதிசங்கரர், இதுபோன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களிடம் செல்வம் இருந்தால் மற்றவர்களுக்கும் அவர்கள் உதவுவார்களே என்று எண்ணி தனது குலதெய்வமான திருக்காலடியப்பனின் மனத்தில் குடிகொண்ட மகாலட்சுமியை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினாராம்.

இதில் உள்ளம் குளிர்ந்த மகாலட்சுமி அந்த ஏழை மூதாட்டியின் குடிசையில் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தாள்.

ஓர் அட்சய திரிதியை நாளில் இந்த சம்பவம் நடந்ததாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் அட்சயதிரிதியை நாளன்று காலடியில் உள்ள திருக்காலடியப்பன் கோயிலில் மகாலட்சுமிக்கு தங்க நெல்லிக்கனி அபிஷேகம் செய்யப்படுகிறது.

அப்போது 32 நம்பூதிரிகள் 10008 முறை கனகதாரா ஸ்தோத்திரத்தை ஜெபிக்கின்றனர்.

மே 9ம் தேதி ஆதி சங்கரர் அவதரித்த நாள் வருகிறது. யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு ரூ.5001 தங்க நெல்லிக்கனியும், ரூ.1001 மதிப்புள்ள வெள்ளி நெல்லிக்கனியும், ரூ.351 மதிப்புள்ள கனகதாரா யந்திரமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

நெல்லிக்கனியை தபாலில் பெற விரும்புவோர், ஸ்ரீகுமார் நம்பூதிரி, நிர்வாக அறங்காவலர், காலடி தேவஸ்தானம், ஸ்ரீ கிருஷ்ணன் கோயில், காலடி- 683 574 , எர்ணாகுளம் என்ற முகவரிக்கு பணம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

போன் தொடர்புக்கு: 093888 62321, 093870 64321

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+