செக் மோசடி-ஸ்ரீதேவிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: ரூ.10 கோடி செக் மோசடி வழக்கில் நடிகை ஸ்ரீதேவிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
திரைப்படம் தயாரிப்பதற்காக ரூ.10 கோடிக்கு 3 செக்குகளை கொடுத்து நடிகை ஸ்ரீதேவி கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த செக்குகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினிமா பைனான்சியர்கள் மது குப்தா, சுசில் குப்தா ஆகியோர் குர்லா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் குர்லா நீதிமன்றம் ஸ்ரீதேவிக்கு சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் தனது கணவர் போனி கபூர், வியாபார விஷயமாக கையெழுத்திடாத சில செக்குகளை அந்த பைனான்சியர்களிடம் கொடுத்திருந்தார். அவற்றில் என்னை போலவே போலியாக கையெழுத்து போட்டு பைனான்சியர்கள் மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஜுஹூ போலீசில் ஸ்ரீதேவி புகார் செய்தார்.
இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்திலும் ஸ்ரீதேவி வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து குர்லா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி மீதான வழக்கு விசாரணைக்கு கடந்த மார்ச் 26ம் தேதியன்று மும்பை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
மேலும், ஸ்ரீதேவி கொடுத்த புகாரை 3 மாதங்களில் விசாரித்து முடிக்குமாறு ஜுஹூ போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பைனான்சியர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு ஸ்ரீதேவிக்கும், மஹாராஷ்டிர அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications