இன்று அட்சய திரிதியை: தங்கத்தை மிஞ்சுமா பிளாட்டினம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்சய திரிதியை இன்று மற்றும் நாளை (7 மற்றும் 8ம் தேதி) கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு அட்சய திரிதியைக்கு பிளாட்டினம் வாங்குவது நல்லது என்று பிரபல ஜோதிடர்கள் கூறியுள்ளதால் அதை வாங்க கூட்டம் அலைமோதலாம் எனத் தெரிகிறது.

சித்திரை மாத வளர்பிறை காலத்தில் 3ம் பிறை தோன்றும் நாள்தான் அட்சய திரிதியை'. அன்றைய தினம் சந்திரனும், சூரியனும் உச்சம் பெற்றிருப்பதால் காரிய சித்தியும், பொருள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை.

நகை, வீடு, மனை, வாகனம் போன்றவை இந்த தினத்தில் வாங்குவது விசேஷம். அட்சய திரிதியை தினத்தில் வாங்கும் பொருட்களால் அதிர்ஷ்டம் உண்டாகும். அதிலும் தங்கம் வாங்குவது மங்களகரமானது என்பது நம்பிக்கை.

இந்த நாளில்தான் திருமாலின் 6வது அவதாரமாகிய பரசுராமர் அவதரித்ததாகவும், சொர்க்கத்தில் இருந்து கங்கை பூமிக்கு வந்த தினமாகவும், திரேதா யுகம் தொடங்கியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

தவிர, புதிய தொழில் தொடங்குவது, புதிய வங்கி கணக்குகள் தொடங்குவது போன்றவற்றை இந்த தினத்தில் பலர் மேற்கொள்கின்றனர்.

அட்சய திரிதியை 8ம் தேதி என்று காலண்டர்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இன்று (7ம் தேதி) மதியம் 1.32 மணிக்கு திரிதியை திதி தொடங்கி விடுகிறது.

நாளை புதன் கிழமை என்பதால் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற சிறப்பையும் இந்த திரிதியை பெறுகிறது. நகை, வீடு, மனை, வாகனம் போன்றவை வாங்க நாளையே சிறந்த நாளாகும்.

புதிதாக வாங்கும் நகைகளை நாளை மறுநாள் காலை 11 மணிவரை திதி இருப்பதால் அதற்குள் அணிந்து கொள்வது நல்லது.

இன்று லஷ்மி பூஜை செய்வது மேலும் வளம் தரும். வீட்டில் கலசம் வைத்து பூஜை செய்து சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பது நல்லது.

பிளாட்டினம்-தங்கம் போட்டி:

ஒவ்வொரு ஆண்டு பிறக்கும்போதும் அந்தாண்டுக்கான பூ, விலங்கு, உலோகம், திசை ஒன்றை விசேஷமாக கடைபிடிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு அட்சய திரிதியைக்கு வெண் தங்கம் எனப்படும் பிளாட்டினம் அல்லது வெள்ளி வாங்குவது நல்லது என்று பிரபல ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே பிளாட்டினம் நகைகள் பிரபலமாகி வருகின்றன. இருந்தாலும் பெண்களிடம் தங்கத்துக்கு உள்ள மவுசு பிளாட்டினத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது உண்மை. இதில், எங்களிடம் பிளாட்டினம் நகையும் இருக்கிறது என்று பெருமைக்காக வாங்கி வைத்திருக்கும் பெண்களும் உள்ளனர்.

எனவே இந்தாண்டு தங்கம்- பிளாட்டினம் போட்டி இருக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.

தங்கம் விலை நிலவரம்:

கடந்த மார்ச் மாதத்தில் பவுன் விலை ரூ.10,000த்தை கடந்து மக்களை பயமுறுத்தியது. இந் நிலையில் அட்சிய திரிதியை நாளில் நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்களா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் திடீரென்று தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது.

கடந்த ஆண்டை விட ரூ.1,400 அதிகரித்திருந்தாலும் தங்கம் வாங்கும் மனோநிலையில் இருந்து மக்கள் மாறவில்லை. அட்சய திரிதியை மற்றும் திருமண விசேஷங்களை முன்னிட்டு 50 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கம் கிராம் ரூ.1,075க்கும் பவுன் ரூ.8,600க்கும் விற்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+