புலிகள் இயக்க முக்கியத் தலைவர் சாந்தன் பிரிட்டனில் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்தான் ஏ.சி.சாந்தன். மறைந்த ஆன்டன் பாலசிங்கத்துடன் இணைந்து லண்டனில் செயல்பட்டு வந்தார்.
நார்வே அமைதிக் குழுவின் முயற்சியால் ஜெனீவாவில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பாலசிங்கத்துடன் சாந்தனும் கலந்து கொண்டார்.
கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி சாந்தனை லண்டன் போலீஸார் கைது செய்தனர். பின்னர் நவம்பர் 22ம் தேதி அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவர் திடீரென கைது செய்யப்பட்டார்.
வில்ட்ஷயர் போலீஸார், ஸ்வின்டன் என்ற இடத்தில் நடந்த சோதனையின்போது சாந்தனைக் கைது செய்தனர்.
தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, ஆயுதம் வாங்க பணம் திரட்டியதாக சாந்தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29ம் தேதி லண்டனில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை லண்டன் போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து தற்போது சாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாந்தனின் மனைவியும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாந்தனின் இயற்பெயர் அருணாச்சலம் கிறிசாந்தகுமார். இவருக்கு வயது 51.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications