தமிழகத்தில் மீண்டும் கொத்தடிமைகள் கணக்கெடுப்பு
திருச்சி: தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர் மறு கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. கண்டறியப்படும் கொத்தடிமைகளுக்கு உடனடி நிவாரணமாக ரூ.20,000 வழங்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த மறு கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
திருச்சியில் இந்த கணக்கெடுப்புக்கான பயிற்சியை ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் தங்க கலியபெருமாள் இன்று தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் செங்கல் சூளை, அரிசி ஆலை உள்பட 20 தொழில்களில் கொத்தடிமை முறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலை, செங்கல் சூளைகளில் குழந்தைகள் உள்பட ஏராளமான கொத்தடிமை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொத்தடிமை தொழிலாளர்களை அமர்த்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளருக்கு உடனடி நிவாரணமாக ரூ.1000ம், மறுவாழ்வு நிவாரணமாக ரூ.19,000ம் வழங்கப்படும். இதுதவிர அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, குழந்தைகளுக்கு கல்வி உதவி போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படும்.
கடந்த 1990ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எடுக்கப்பட்ட முதல் கணக்கெடுப்பில் 13,609 கொத்தடிமைகள் கண்டறியப்பட்டு அவர்களது மறுவாழ்வுக்காக தலா ரூ.19,000 வழங்கப்பட்டது. கொத்தடிமைகள் மறுவாழ்வுக்காக 1996-97 ஆண்டில் இருந்து இதுவரை ரூ.16.54 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் கொத்தடிமைகள் கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிக்காக ரூ.60 லட்சமும், கணக்கெடுப்பை சரிபார்க்க கூடுதலாக ரூ. 15 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு துறையினருடன் தொண்டு நிறுவனங்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களுக்குள் கணக்கெடுப்பு முடிவடையும். ஆனால் சில தொண்டு நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளதை பரிசீலிப்போம் என்றார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications