கீழக்கரை: கள்ளக் காதலால் பெரும் கலவரம்
ராமநாதபுரம்: கீழக்கரையில் வேன் டிரைவர் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டதை கண்டித்து பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் மருதந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன், வேன் டிரைவர். கடற்கரை கிராமமான கீழக்கரையைச் சேர்ந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் சமூகத்தினர் ஜெயமுருகனை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்தனர்.
இதில் ஜெயமுருகன் படுகாயமடைந்தார். தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கண்டித்தும், ஜெயமுருகனை தாக்கியவர்களை கைது செய்யக் கோரியும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் பஸ் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. கடைகள் மூடப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து சமரசம் செய்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஜெயமுருகனை தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. பஸ் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள் மூடப்பட்டன. ஆட்டோ, பஸ் போக்குவரத்து நிறுப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications