Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நர்கீஸ் பலி 22,500: மியான்மருக்கு இந்தியா உதவி

Subscribe to Oneindia Tamil

யாங்கூன்: மியான்மரை தாக்கிய நர்கீஸ் புயலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 22,500 ஆக உயர்ந்துள்ளது. 41,000 பேரை காணவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியா சார்பில் மருந்து உள்ளிட்ட நிவாரண உதவிகள் ராணுவ கப்பல்கள் மற்றும் விமானங்களில் விரைந்து அனுப்பப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தை அச்சுறுத்திய நர்கீஸ் புயல் திசைமாறி கடந்த 3ம் தேதி மியான்மரை பயங்கரமாகத் தாக்கியது. தலைநகர் யாங்கூன் மற்றும் அருகில் உள்ள தீவுகளில் மணிக்கு 190 கி.மீ. வேகத்தில் புரட்டிப் போட்டது.

புயல் கடுமையாக தாக்கியதில் யாங்கூன் மற்றும் அந்நாட்டு நெற்களஞ்சியமான இர்ரவாடி டெல்டா பகுதிகள சின்னாபின்னமாகின. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் பெயர்ந்து விழுந்தன.

சேதமடைந்த பகுதிகளில் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று கிடைத்த தகவலின்படி 10,000க்கும் அதிகமானோர் இறந்ததாக கூறப்பட்டது. இர்ரவாடி டெல்டா பகுதியில் பொகாலே என்ற நகரமே அடியோடு அழிந்துபோனது. அங்கு மட்டும் 10,000 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரம் பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. மிகப்பெரிய நகரமான யாங்கூனிலும் மிக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்குள் மீட்பு குழுவினரால் செல்ல முடியவில்லை. இதனால் சேத விவரம் முழுமையாக தெரியவில்லை. உட்புற கிராமங்களுக்கு மீட்பு குழுக்கள் சென்ற பிறகே, அங்குள்ள நிலைமை தெரிய வரும்.

இதற்கிடையே புயலுக்கு 22,500 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 41,000 பேரை காணவில்லை என்றும் மியான்மர் அரசு வானொலி அறிவித்தது. புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து தவிப்பதாக மியான்மர் வெளியுறவு மந்திரி நயான் வின் தெரிவித்தார்.

இர்ரவாடி டெல்டாவில் உள்ள கிராமங்களிலும், யாங்கூன் நகரிலும் சேத விவரங்களை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார். வரலாறு காணாத இந்த தாக்கம் அந்நாட்டை புரட்டிப்போட்டுள்ளது.

புயலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு உதவுமாறு உலக நாடுகளுக்கு ஐ.நா.வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிளாஸ்டிக் ஷீட்கள், தண்ணீரை சுத்தமாக்கும் மருந்துகள், சமையல் கருவிகள், கொசு வலைகள், சுகாதார கருவிகள், உணவு, மருந்து, போர்வைகள், உடைகள் போன்ற அத்யாவசிய பொருட்கள் அதிகளவில் தேவைப்படுவதாக யாங்கூனில் உள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மர் மீது விதிக்கப்பட்டுள்ள தனது தடைகளை தளர்த்த தயாராக இருப்பதாகவும் உதவுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியா நிவாரணம்:

இந்நிலையில், 'ஆபரேஷன் சஹாயத்' என்ற பெயரில் மியான்மருக்கு மீட்பு உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது. இதன்படி மக்கள் தங்குவதற்கான கூடாரங்கள், உணவு மற்றும் மருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற ஐஎன்எஸ் ராணா, கிர்பான் ஆகிய இந்திய போர்க் கப்பல்கள் மியான்மர் தலைநகர் யாங்கூனை இன்று அதிகாலையில் சென்றடைந்தன.

இந்நிலையில் மேலும் 2 விமானப்படை சரக்கு விமானங்களில் கூடுதல் மருந்து மற்றும் உணவுப் பொருள்கள் அடங்கிய நிவாரணப்பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

அடுத்தகட்ட நிவாரணப் பொருள்களை விமானங்கள் மூலம் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மும்முரமாகச் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+