அட்சய திரிதியை- அலைமோதிய கூட்டம்
சென்னை: அட்சய திருதியையை முன்னிட்டு நேற்று நகை வாங்க கூடிய கூட்டம் இன்றும் நகைக் கடைகளில் அலை மோதியது.
நேற்றும், இன்றும் அட்சய திரிதியை தினமாகும். அதிலும் இன்றுதான் விசேஷமான தினம். இதனால் நகை வாங்க மக்கள் கூட்டம் நகைக் கடைகளில் அலை மோதியது.
இந்த ஆண்டு நகை விலை மிகவும் கடுமையாக இருப்பதால் நேற்றைய தினம் நகை வாங்க பெரிய அளவில் கூட்டம் இல்லை. அதேசமயம், இன்று நகைக் கடைகளில் திருவிழாக் கூட்டத்தைக் காண முடிந்தது.
குண்டுமணி நகையாவது வாங்க வேண்டும் என்ற மக்களின் எண்ணத்தால் இன்று நகைக் கடைகளில் விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் அலை மோதியது.
அட்சய திருதியையை முன்னிட்டு சென்னை தி.நகர், புரசைவாக்கம், என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதற்காக நகைக்கடைகளில் கூடுதல் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. குறிப்பாக பெண்கள் கூட்டம் அலைமோதியது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அட்சய திருதியை 2 நாட்கள் கொண்டாடப்பட்டது. நேற்று ஒரே நாளில் 40 டன் வரை தங்கம் விற்பனையாகியிருக்கலாம் என உலக தங்க கவுன்சில் நிர்வாக இயக்குனர் அஜய் மித்ரா தெரிவித்துள்ளார். இன்றும் சேர்த்து 70 கிலோ தங்கம் விற்பனையாகியிருக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நகைக் கடைகள் தவிர வங்கிகளில் தங்க நாணயங்களும் விற்கப்பட்டன. இரண்டரை கிராம், 5 கிராம், 10 கிராம், 20 கிராம் மற்றும் 50 கிராம் எடைகளில் தங்க காசுகள் விற்பனை செய்யப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications