ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டம்: ஆந்திராவில் 10 பேர் கைது
விஜயவாடா: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் நடத்தியதாக ஆந்திராவில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி மற்றும் கொல்கத்தாவில் ஐபிஎல் டுவென்டி20 லீக் போட்டிகள் நடந்தன. ஹாட்ரிக் தோல்வி அடைந்த டோணியின் சென்னை சூப்பர் கிங்ஸ், அதிரடி வீரர் சேவாக்கின் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளின் போட்டி நேற்றும் கடும் விறுவிறுப்பாக இருந்தது.
இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டம் நடப்பதாக குண்டர் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் விஜயவாடா கோவிந்தராஜுலு மீன் மார்க்கெட்டில் போலீஸார் திடீரென்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், டிவி ஒளிபரப்பை பார்த்து பணம் கட்டி பந்தயம் நடத்திய 10 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.69,756, 8 செல்போன்கள் மற்றும் டிவி பறிமுதல் செய்யப்பட்டது. கிரிக்கெட் சூதாட்டம் நடத்தியதாக அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications