வட கொரியாவுக்கு அணு ரகசியத்தை லீக் செய்தார் பெனாசிர்: நூல்
டெல்லி: மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, 1993ம் ஆண்டு வட கொரியாவுக்குச் சென்றபோது முக்கிய அணு ரகசியங்களை தனது கைப்பட வட கொரிய அரசிடம் வழங்கியதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
பெனாசிர் பூட்டோவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஷியாம் பாட்டியா என்பவர் எழுதியுள்ள, பெனாசிர் பூட்டோவின் வாழ்க்கை வரலாற்று நூலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1993ம் ஆண்டு பெனாசிர் பூட்டோ, வட கொரியத் தலைநகர் பியாங்கியாங்கிற்குச் சென்றார். அப்போது முக்கிய அணு தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்களை தனது ஓவர்கோட்டில் வைத்துக் கொண்டார். அவற்றை வட கொரிய அரசின் முக்கிய அதிகாரிகளிடம் தனது கைப்பட பெனாசிர் பூட்டோ வழங்கினார் என பாட்டியாவின் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுரேனியம் செறிவூட்டும் தொழில்நுட்பம் குறித்த தகவலைத்தான் வட கொரிய அதிகாரிகளிடம் பெனாசிர் பூட்டோ வழங்கியதாக பாட்டியா தெரிவித்துள்ளார். அதற்குப் பரிசாக வட கொரியா, பாகிஸ்தானுக்கு ஏவுகணைகளை வழங்கியது என்றும் பாட்டியா தெரிவித்துள்ளார்.
குட்பை ஷாஸாதி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நூலில், இந்தத் தகவல்களை பெனாசிர் பூட்டோவே தன்னிடம் தெரிவித்ததாகவும் பாட்டியா கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் ராணுவ ஆய்வுகளை இந்தியா, ரஷ்யா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் தீவிரமாக கண்காணித்து வந்ததால், வேறு யார் மூலமாகவும் இதை வட கொரியாவுக்குக் கொடுக்க விரும்பாத பெனாசிர், தானே அதை எடுத்துச் செல்லத் தீர்மானித்தார்.
இஸ்லாமாபாத்தை விட்டுக் கிளம்புவதற்கு முன்பு ஒரு புதிய ஓவர் கோட்டை பெனாசிர் வாங்கினார். உட்புறம், முக்கிய கோப்புகளை வைப்பதற்கேற்ற பெரிய பாக்கெட்டுகள் அடங்கிய கோட் அது. அந்த பாக்கெட்டில் யுரேனியம் செறிவுத் தொழில்நுட்பம் அடங்கிய சிடி, சில முக்கியத் தகவல்கள் அடங்கிய கோப்புகளை பெனாசிர் வைத்துக் கொண்டார் என்று பாட்டிாயவின் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications